புதுவித சாதனை படைத்த ஷிவம் துபே… இந்த ரெக்கார்டில் உலகிலே இவர் தான் முதல் கிரிக்கெட் வீரர்.!
சிவம் துபே தொடர்ச்சியாக 30 இருபது20 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ஷிவம் துபேஒரு புதுவித சாதனையைப் படைத்துள்ளார்.அது என்னவென்றால், இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் ஷிவம் தூபே.
இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் டி20யை இந்திய அணிக்காக விளையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது வரையில், தொடர்ச்சியாக அவர் களமிறங்கிய 30 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.இவர் இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சொல்லப்போனால், சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டதிலிருந்து இந்தியா 30 போட்டிகளில் தோற்காமல் உள்ளது. இது ஒரு இந்திய வீரர் படைத்த சாதனை மட்டுமல்ல, உலகின் முதல் வீரரும் இவர் தான். இதன் மூலம், ஷிவம் துபே இந்திய அணியின் ‘Lucky Charm’ ஆக மாறியிருக்கிறார்.
If Dube plays, India wins
30-0 and still going strong 🥳💪🏻💥#WhistlePodu #INDvENG
📸 : BCCI pic.twitter.com/qMCCBxC0rb— Chennai Super Kings (@ChennaiIPL) February 3, 2025
துபே இந்தியாவுக்காக 35 டி20 போட்டிகளில் 26 முறை பேட்டிங் செய்துள்ளார், மேலும் நான்கு அரைசதங்களுடன் மொத்தம் 531 ரன்கள் எடுத்துள்ளார். அதிலும், கடந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான் டி20 போட்டியில் 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.