INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில் அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையில் ஒரு நாள் தொடரை கைப்பற்ற களமிறங்கவுள்ளது.

ind vs eng 1st odi

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் 4-1 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து, அனைவருடைய கவனமும் ஒரு நாள் தொடர் மீது திரும்பியுள்ளது.

இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும், டி20 தொடரில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளது.

போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், இந்திய அணி சார்பாக விளையாடவிருக்கும் வீரர்கள் குறித்த ஃப்ளையிங் லெவன் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்ப்போம்.

அதன்படி, ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து அணியை வழிநடத்துவார். அதே சமயம், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டிகளில்  மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாகவும் இருக்கும். மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷித் ராணா அணியுடன் இருப்பார்.

முதல் போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள் (எதிர்பார்க்கப்படும்) 

ரோஹித் சர்மா(சி). சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விகீ) அல்லது கே.எல். ராகுல் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

அறிவிக்கப்பட்ட (India Squad)  

ரோஹித் சர்மா (c), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்