டெல்லி தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் – அண்ணாமலை பேச்சு!

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ANNAMALAI and MODI

டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும்  சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தும் விட்டது. இந்த சூழலில்,டெல்லியில் பாஜக தான் வெற்றிபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில்  பேசிய அவர் ” பாஜகவை பொறுத்தவரை சொன்னதைச் செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஏனென்றால், அந்த அளவுக்கு பாஜக செயல் திட்டங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.மோடியின் வளர்ச்சி திட்டங்கள் பாஜகவுக்கு அதிக ஆதரவை பெற்றுத்தரக்கூடும் என நான் எதிர்பார்ப்பிக்கிறேன்.

எனவே, டெல்லியில் பாஜக வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் 7 எம்.பி.க்களை கொடுத்த டெல்லி மக்கள், தற்போது ஆம் ஆத்மி கட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்திருப்பார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி என்ற பெயரில் பாஜக வெற்றி பெறும்” எனவும் அவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” திருப்பரங்குன்றம் மலைக்கோயில் விவகாரம் பற்றியும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” 4-ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் பல லட்சம் இந்துக்கள் கூடுவார்கள் என்பது திமுகவிற்கு தெரியும்.. அணையில் இருந்து வரும் நீரை எத்தனை நாள் கேட் போட்டு தடுக்க முடியும்.?  எங்களுக்கு எத்தனை முறை 144 தடை உத்தரவு போட முடியும்? நிச்சயம் ஒரு நாள் அணையை உடைத்துக்கொண்டு வரும்.

மக்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சினை? வேண்டுமென்றே பிரச்சினையை தூண்டுவதற்காக தான் இப்படி திமுக செயல்பட்டு வருகிறது. திமுக இன்று தங்களுடைய அதிகாரத்தை கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எப்படி எழுதினாரோ அதேபோலவே தான் கதை திரைக்கதை வசனம் போல ஆட்சி செய்ய முடிவு செய்துவிட்டார்கள் .இதெல்லாம் பெரிய ஆபத்தில் தான் ஒரு நாள் முடியப்போகிறது” எனவும் அண்ணாமலை வெளிப்படையாக பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்