STR50 : கைவிட்ட கமல்ஹாசன்…சிம்பு எடுத்த அதிரடி முடிவு!
சிம்புவின் 50-வது படம் குறித்த அறிவிப்பு தற்போது போஸ்டருடன் வெளியிடபட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை சிம்புவுக்கு முன்னதாகவே இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியிருந்தார்.
படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சிலர் காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சிம்புவிடம் இந்த கதையை அவர் கூறினார். சிம்புவுக்கு இந்த கதை மிகவும் பிடித்த காரணத்தால் அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்.
படம் மிகவும் பெரிய பிரமாண்ட படம் என்பதால் படம் எடுக்க சிறிது காலங்கள் ஆகியுள்ளது. இருப்பினும், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. இந்த சூழலில், திடீரென படத்தில் இருந்து தயாரிப்பாளர் கமல் விலகியதாகவும், படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கருதி விலகினார். எனவே, இதனால் இந்த படம் நடக்குமா? நடக்காதா? எனவும் கேள்விகள் எழும்பியது.
இந்த நிலையில், இன்று சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு தெளிவான விளக்கமும் கிடைத்தது. அதன்படி, முன்னதாக STR48 படமாக இந்த படம் கூறப்பட்ட நிலையில், தற்போது இது அவருடைய 50-வது படமாக மாறியுள்ளது. படத்தை சிம்புவே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே, கமல் இந்த படத்தை தயாரிக்கும்போதே படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்போது கமலே விலகியுள்ள நிலையில், சிம்பு தன்னுடைய சொந்த பணம் மூலம் படத்தை எடுக்கவுள்ளதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
இறைவனுக்கு நன்றி!
I’m excited to share that I’m stepping into a new journey as a producer with @Atman_cinearts .
There’s no better way to begin this, than with my 50th film, a dream project for both me and @desingh_dp . We are pouring our hearts into this!Excited for this new… pic.twitter.com/j5KLu9X2QW
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025