LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை..,
அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு வரை பல்வேறு அரசியல் நகர்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் (பிப்ரவரி 5) டெல்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளதால் இன்று மாலையுடன் அனைத்துக்கட்ட பிரச்சாரமும் நிறைவடைகிறது. அதனால் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.