இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள தி ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் நிதிமோரு உடனான டேட்டிங் வதந்தியை அதிகப்படுத்தியுள்ளது.

samantha - raj

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த டேட்டிங் விவகாரத்தை அவரே ஊதி பெரிது படுத்தியுள்ளார் போல் தெரிகிறது,
அட ஆமாங்க… இதற்கெல்லாம் காரணம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான்.

நடிகர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2021-இல் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகம் வாயிலாக அறிவித்தனர். அதன் பின்னர், நடிகை சமந்தாவின் திருமணம் பற்றி பல கிசுகிசுக்கள் இணையத்தில் அடிக்கடி பரவுவது வழக்கம். ஆனால் சமந்தா இதைப் பற்றி கவலைப்படவில்லை, அதற்கு பதில் கூட அளித்ததில்லை.

இந்த நிலையில், நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் காதல் வதந்திகளை முதலில் நிராகரித்த சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, சமீபத்தில் ஷோபிதாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது சமந்தாவும் டேட்டிங்கில் இருப்பதாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கிறது.

சமீபகாலமாக பிரபல இயக்குனர் ராஜ் நதிமுருவுடன் நடிகை சமந்தாவுடன் ஒப்பிட்டு டேட்டிங் குறித்த செய்திகள் உலா வந்த நிலையில், அதனை தற்போது சமந்தாவே இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உறுதி படுத்திருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். இதில் ராஜ் நிதி மோரும் உடன் இருந்தார். அவர் பகிர்ந்த புகைப்படங்களின் ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில், சமந்தா இயக்குனரின் கையைப் பிடித்திருப்பதைக் காணலாம். இது அவர்களின் டேட்டிங் வதந்திகளுக்கு மேலும் பேசும்பொருளாக மாற்றியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்