நீங்களா இப்படி? பெண் ரசிகைக்குக்கு லிப் கிஸ் கொடுத்த உதித் நாராயண்!
இசை கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்தபோது தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு பாடகர் உதித் நாராயணன் முத்தம் கொடுத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் செய்த செயல் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்றால், தன்னுடன் செல்பி எடுக்க வந்த பெண்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தது தான்.
புதுச்சேரியில் அவருடைய இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த உதித் நாராயணனை சில பெண் ரசிகைகள் பார்த்து உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு ரசிகையை பார்த்த அவர் வாருங்கள் எடுத்து கொள்ளுங்கள் என அழைத்து போஸ் கொடுத்தார்.
பின் அந்த பெண் ரசிகை உதித் நாராயணனுக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். அவர் கன்னத்தில் முத்தம் வாங்கிவிட்டு அந்த பெண் ரசிகைக்கும் முத்தம் கொடுத்தார். அதைப்போல, ஒரு ரசிகை போட்டோ எடுத்து பார்த்துவிட்டு மேலும் சில பெண்களும் அவருடன் புகைப்படம் எடுக்க சென்றார்கள். அவர்களும் புகைப்படம் எடுக்க ஓடி வந்தனர். அவர்களுடனும் உதித் நாராயணன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
அப்போது, மேலும் சில பெண்களும் அவருக்கும் முத்தம் கொடுக்க முயற்சி செய்தனர். அவர்களுக்கும் உதித் நாராயணன் முத்தம் கொடுத்தார். அதைப்போல, மற்றோரு பெண் ரசிகை கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்ற போது அவருக்கு லிப் கிஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ பார்த்த பலரும் பொது நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொள்வது என தங்களுடைய கேள்விகளை கோபத்துடன் எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்.
என்ன நடக்குது இங்க 🙄🙄
உதித் நாராயணன் 🙄🙄🙄 pic.twitter.com/XMy8JeiJ4u
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) February 1, 2025
இது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், உதித் நாராயணனும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் ஒழுக்கமாக தான் இருக்கிறோம். ரசிகர்கள் தங்களுடைய அன்பை எப்படி காட்டவேண்டும் என்று தெரியாமல் இப்படி காண்பிக்கிறார்கள். மற்றபடி நான் வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கும் எண்ணம் கொண்ட நபர் இல்லை. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்” எனவும் உதித் நாராயணன் தெரிவித்துள்ளார்.