பட்ஜெட் 2025 : “தமிழகத்துக்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்” – ஜெயக்குமார்
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை தொடர்ந்து, பாஜக மற்றும் பாஜக ஆதரவுவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தால், காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் பட்ஜெட் உரை தொடங்கும் முன்னரே வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும்,தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என்ற காரணத்தால் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஒதுக்கீடுகள் குறைவாக உள்ளன. தமிழகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கூட ஒட்டுமொத்தமாக நடுத்தர மக்களுக்கு உகந்த பட்ஜெட் ” எனவும் கருத்து தெரிவித்தார்.
அதேபோல், திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு, தனது எதிர்ப்பை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய அரசு பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, இது அங்கு நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக விமர்சித்தார். அவர், மத்திய பட்ஜெட் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்