ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கு முக்கிய பதவிகள்! தவெக தலைமை அறிவிப்பு!
ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராகவும், சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு ஐடி விங் துணை பொதுச்செயலாளராகவும், ராஜ்மோகன் கொள்கை பரப்பு செயலாளராகவும் தவெக-வில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை தவெக-வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, விசிக துணை பொதுச்செயலாளராகவும், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூகம் அமைக்கும் குழுவிலும் செயலாற்றி, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக-வில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக ஐடி விங் மற்றும் அதிமுக ஐடி விங்-கில் செயலாற்றி வந்த சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தவெக துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர் தவெக ஐடி விங்-ஐ கவனித்து கொள்வர் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மேடை பேச்சாளர் ராஜ்மோகனுக்கு தவெக-வில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025