பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! காரணம் என்ன?
அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அடுத்து பாகிஸ்தான் நாட்டுக்கான நிதி உதவியை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவு அறிவித்தார். அவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டி இதனை அறிவித்திருக்கிறார். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவியை தற்காலிகமாக நிறுத்தி, அதனை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது பாகிஸ்தானில் அமெரிக்க சர்வதேச உதவி முகமை (USAID) மூலம் நடைபெறும் பல முக்கிய திட்டங்கள் நிறுத்த ஒரு காரணமாவும் அமைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வருடத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 11,000 கோடி) அளவில் நிதி உதவி வழங்கி வந்தது. இந்த உதவி, பாகிஸ்தானின் உருவாக்கம், வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பு அளிக்க முக்கிய காரணமாகவும் இருந்தது. இந்த சூழலில், இப்போது இனிமேல் நிதி உதவி வழங்கப்படாது என அமெரிக்காவின் முடிவெடுத்துள்ளது பாகிஸ்தானின் எரிசக்தி, ஆரோக்கியம், விவசாயம், கல்வி மற்றும் செருக்கு உதவி போன்ற துறைகளில் பல திட்டங்களை பாதித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தி, அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு மட்டும் உதவி வழங்கத் தொடங்கியது எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. USAID உலகளாவிய உதவிகளை வழங்கும் முக்கிய அமைப்பாக உள்ளதால், இந்த முடிவு பல உலகளாவிய திட்டங்களை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகையில் (White House) செய்தியாளர்களுடன் பேசியபோது டொனால்ட் டிரம்ப் பேசுகையில் ” பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் நிலத்திலுள்ள பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்க பாதுகாப்பிற்கு புறம்பான ஆபத்தாக உள்ளன.
நாம் பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக உதவி வழங்கிவருகிறோம், ஆனால் அதே சமயம் அவர்கள் நம்முடைய முக்கிய உத்தரவுகளை பின்பற்றவில்லை. எனவே, இந்த உதவியை நிறுத்தி, அவர்களுடன் நமது உறவை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் திட்டவட்டமாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.? வெளிச்சத்துக்கு வந்த மணமுறிவுக்கான காரணம்.!
February 21, 2025
எங்க கிட்ட ரஷீத் இருக்காரு..கவலை கொஞ்சம் கூட இல்லை..ஆப்கானிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு!
February 21, 2025
ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
February 21, 2025