INDvENG : டாஸ் வென்ற இந்திய அணி! பேட்டிங்கிற்கு தயாரான இங்கிலாந்து அணி! 

ராஜ்கோட்டில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

INDvENG 3rd T20I - india won toss opt to bowl

ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது.

முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றும். அதற்கான முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி தொடரை வெல்ல அடுத்தடுத்த 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கான முனைப்புடன் அந்த அணியும் களமிறங்குகிறது.

3வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் பேட்டிங் விளையாட ஆயத்தமாகி வருகிறார்கள். இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்கள் :

இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில், பிலிப் சால்ட், பென் டக்கெட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித்(விக்கெட் கீப்பர்), ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் :

இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் தலைமையில் சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, துருவ் ஜூரல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar