துபாய் வேலை வாய்ப்பு : 10வது படித்திருந்தால் போதும்! தமிழக அரசு அறிவிப்பு!

10வது படித்திருந்து குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN Govt announce UAE Jobs

சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என  ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம். அதனை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளிநாட்டு பணியில் சேர விரும்புவோர் விசா வந்த பிறகு அதற்கான சேவை கட்டணத்தை செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, வெல்டர், கட்டுருவாக்கம் ஆகிய  பணிகளுக்கு அதற்குரிய பணி அனுபவத்திற்கு ஏற்ப சம்பள விகிதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் (அபுதாபி, துபாய், ஷார்ஜா, உம்முல் கைவைன், புஜைரா, அஜ்மான் மற்றும் ராசல் கைமா)  இந்த வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட பணிகளில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்டடவர்கள் தேவைப்படுகிறார்கள்.

பணி மற்றும் சம்பள விவரங்கள் :

வெல்டர் (Welder) பணிக்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 78 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பைப்பிங் கட்டுமானம் (Piping Fabricator) ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பைப்பிங் பிட்டர் (Piping Fitter) ரூ. 36 ஆயிரம் முதல் ரூ. 42 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ட்ரெக்சரல் கட்டுமானர் (Structure Fabricator) ரூ. 42 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரெக்சரல் பிட்டர் (Structure Fitter) ரூ. 36 ஆயிரம் முதல் ரூ. 42 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Millwright Fitter பணிக்கு ரூ. 42 ஆயிரம் முதல் ரூ.51 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grinder/Gas cutter பணிக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  Piping Foreman பணிக்கு ரூ. 53 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை கட்டணம் :

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் சேவை கட்டணம் ரூ.35,400-ஐ இந்நிறுவனத்திற்கு செலுத்தினால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இப்பணிகளுக்கான நேர்காணல் வரும் 31.01.2025 (வெள்ளி) மற்றும் 01.02.2025 (சனி) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம்சுய விவரங்கள் அடங்கிய பயோ டேட்டா, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் காப்பி மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அணுக வேண்டிய முகவரி :

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்

42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு…

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in என்ற இணையதள முகவரியையோ, 044-22502267 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, 9566239685 என்ற வாட்ஸப் எண் வாயிலாகவோ அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
good bad ugly ajith ilayaraja
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant