விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய திட்டங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

villupuram CM stalin

விழுப்புரம் :  மாவட்டம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை திறந்து வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகை தந்திருந்தார்.

மணிமண்டபத்தை திறந்து வைத்துவிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 திட்டங்கள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி விவரமாக பார்ப்போம்.

  • சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் திட்டம் ரூ.304 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • விழுப்புரம் வட்டத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேதம் அடைந்த, தளவானூர் அணைக்கட்டு ரூ.84 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
  • கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.
  • காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • விக்கிரவாண்டி பேரூராட்சி கக்கன் நகரில், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும்.
  • செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
  • திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், ரூ.4 கோடி மதிப்பீட்டில், திருமண மண்டபம், சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை கட்டப்படும்.
  • விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலாமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.5 கோடி மதிப்பீட்டில், திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் வழங்கப்படும்.
  • விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், டவுன் ஹால்-ஆக மாற்றப்படும்.
  • தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • விரகனூர் அணையிலிருந்து பாதிரி புலியூர் வழியாக செல்லும் 15 கீ.மீ. சாலை 8 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்