இதுக்கு தான் வெயிட் பண்ணோம்! புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
புஷ்பா 2' திரைப்படம் உலகளவில் ரூ.1,799 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![pushpa 2 ott](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/pushpa-2-ott.webp)
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படம் வசூலில் சம்பவம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். 450 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையையும் படைத்ததது.
அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இப்படம் உலகளவில் ரூ.1,799 கோடி வரை வசூலித்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மொத்த வசூலான ரூ. 1,788 கோடியை முறியடித்து, அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தியப் படமாக ‘புஷ்பா 2’ மாறியுள்ளது.
இந்திய சினிமாவின் வரலாற்றில் மொத்தமாக அதிக வசூலித்த முதலாவது படம் ‘தங்கல்’ தான் முதலிடத்தில் உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.2,024 கோடி வசூல் செய்திருந்தது. புஷ்பா 2 படம் இன்னும் சில நாட்கள் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருந்திருந்து என்றால் நிச்சயக்கமாக அந்த வசூல் சாதனையையும் முறியடித்து இருக்கும்.
இருப்பினும், இந்த அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது,மேலும், படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து எப்போது ஓடிடியில் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளிவந்து இருக்கிறது.
அதன்படி, ‘புஷ்பா 2’ திரைப்படம் ஜனவரி 30 அல்லது 31 அன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் என நம்மதக்க சினிமா வட்டாரத்தில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, ஓடிடியில் வெளியாகும் வெர்ஷனில் கூடுதலாக 24 நிமிட காட்சிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!
February 17, 2025![Kawasaki Ninja 300](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kawasaki-Ninja-300.webp)
“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!
February 17, 2025![TN CM MK Stalin - BJP state president Annamalai (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-state-president-Annamalai-1.webp)
நாதாண்டா மாஸ்… சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாரம்பரிய டச் கொடுத்த கேன் மாமா.! வேட்டியில் வைரல் வீடியோ…
February 17, 2025![Kane Williamson VETI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-VETI.webp)
இதை அவரு கேட்டாருன்னா ஷாக் ஆகிடுவாரு… தவளைக்கு ‘டைட்டானிக்’ நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்.!
February 17, 2025![A New Frog Species Named Leonardo DiCaprio](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/A-New-Frog-Species-Named-Leonardo-DiCaprio.webp)
பிப்.25-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.!
February 17, 2025![Amit Shah visits Coimbatore](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Amit-Shah-visits-Coimbatore.webp)
“அந்த உரிமை யாருக்கும் கிடையாது! போர் குணம் குறையவில்லை!” சீரிய கனிமொழி!
February 17, 2025![DMK MP Kanimozhi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMK-MP-Kanimozhi.webp)