“மீண்டும் தவிக்கும் கேரளா” தாய்லாந்து நாட்டின் உதவியையும் தடுத்தது மத்திய அரசு..!!
கேரளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக வெளிநாடுகள் வழங்க முன்வந்த உதவிகளைப் பெறவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது. அம்மாநில மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருவதை தாய்லாந்து தூதரின் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் , நிலச்சரிவு அந்த மாநில மக்களை மீள முடியாத துயரத்துக்குள்ளாக்கியது.360 பேர் வரை உயிரிழந்தார்கள்.சுமார் 20,000 கோடிக்கு மேல் அந்த மாநிலத்துக்கு நிவாரணம் தேவைப்பட்ட்து.மத்திய அரசு வழங்கியது 600 கோடி.இந்நிலையில் கேரளாவுக்கு தமிழகம் , அண்டை மாநிலங்கள் மற்றும் உலகளாவியளவில் மக்கள் உதவி செய்ய முன் வந்தனர்.சுமார் 1000 கோடிக்கு மேல் முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் பணமாக வந்துள்ளது என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில் தாய்லாந்து தூதர் சுடின்டோன், மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்து ள்ளார். மத்திய அரசின் நிலைப்பாட்டால் கேரளத்துக்கு உதவிடும் முன் முயற்சி யிலிருந்து பின்வாங்குவதாகவும் டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். “முதலில் தாய்லாந்து மக்களிடமிருந்து அரசின் மூலமாக கேரளத்துக்கு உதவிகளை அளிக்க முயற்சி செய்யப்பட்டது. அதை மத்திய அரசு நிராகரித்தது. பின்னர் தாய்லாந்து வர்த்தக தொடர்புகள் மூலம் அரசிடம் உதவிகளை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதிலிருந்து தூதர் விலகி நிற்க வேண்டும் என கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள தாய்லாந்து நிறுவனங்களிடம் தனியாக செயல்படுமாறு பரிந்துரை செய்யப்பட்டதால் நான் பின்வாங்குகிறேன்” என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சவூதிஅரேபியா கெளளவுக்கு உதவ முன்வந்த பொது அதையும் தடுத்து கேரள மக்கள் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோவத்துக்கு ஆளான மத்திய அரசு தற்போது தாய்லாந்து நாட்டின் உதவியையும் தடுத்து நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
DINASUVADU