தனுஷ் – நயன்தாரா வழக்கு: உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!

நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Dhanush-Nayanthara case

சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிலிக்ஸ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

முன்னதாக, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி விசாரணையை இன்று (ஜன.22ம் தேதி) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர் முடியும். காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், “படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னை வீனஸ் காலனியில் தான் அலுவலகம் இருந்தது எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தின் அத்தனை காட்சிகளும் தனக்கு சொந்தமானவை என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting