கத்திக்குத்து சம்பவம்: நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!
கத்திக்குத்து தாக்குதலுக்கு பின் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைஃப் அலிகான், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மூன்று நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தாக்குதல் நடத்திய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, மருத்துவமனையின் மருத்துவர்கள், சைஃப் இப்போது நலமாக இருப்பதாகவும், குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். அதன்படி, கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சைஃப் அலி கானுக்கு இப்போது நடக்க முடிகிறது, அவரால் சரியாகப் பேச முடிகிறது. ஆனால் முழுமையாக குணமடைய ஒரு மாதம் ஆகும். இதனால், சைஃப் அலி கான் பூரண குணமடையும் வரை, ஜிம் மற்றும் எடை தூக்குவது, படப்பிடிப்பில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்குமாறு கூறிய மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.