பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்கள் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து மகிழ்ந்தனர்
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் இன்று மேல்பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிராம மக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ” இந்த நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள். உங்கள் காலடி மண்ணை தொட்டு தான் என் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என தோன்றியது. இங்கிருந்து தான் எனது கனவு அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். எனது முதல் மாநில மாநாட்டில், இயற்கை வள பாதுகாப்பு. இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வளர்ச்சி என கூறியிருதேன். ஓட்டு அரசியலுக்காக நான் இங்கு வரவில்லை.
13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக மற்றவே இந்த பரந்தூர் விமான நிலைய திட்டம் வருகிறது. இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம். இந்த முடிவில் நாங்கள் (தாவெக) உறுதியாக நிற்போம்” எனவும் விஜய் பேசினார்.
விஜய் பேசியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பரந்தூர் ஏர்போட்டுக்கு எதிராக போரடும் மக்கள் “விவசாயிகளின் கண்ணீரை துடைக்க களத்திற்கு வந்த 2026 ன் தமிழக முதலமைச்சர் க்கு விவசாயிகளின் சார்பாக பச்சை துண்டு போற்றுகிறோம் என கூறி துண்டினை வழங்கினார்கள். உடனடியாக அதனை வாங்கிக்கொண்டு விஜய்யும் தனது கழுத்தில் போட்டுக்கொண்டார்.
அத்துடன் விவசாயிகள் விஜய்க்கு நெற்கதிர்களையும் அன்பு பரிசாக வழங்கினார்கள். விவசாயிகள் வழங்கிய பச்சை நிற துண்டை அணிந்தபின், அவர்கள் வழங்கிய நெற்கதிரை வாங்கி, பிரசார வாகனத்தில் பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தபடி விஜய் வீட்டிற்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.