பண மோசடி வழக்கு! ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வங்கதேச முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசனை பண மோசடி வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய வங்கதேச நாட்டுக்கு செல்லாமல் வேறு சில நாடுகளில் வாசித்துக்கொண்டு வருகிறார். அதற்கு முக்கியமான காரணமே வங்கதேச நாட்டில் அரசு கவிழ்க்கப்பட்டது தான்.
கடந்த ஆண்டு வங்கதேச அரசு கவிழ்ந்தபோது ஹசன் கனடாவில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் அவர் இன்னும் நாடு திரும்பவில்லை. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் $300,000 (3கோடி) க்கும் அதிகமான காசோலைகள் பவுன்ஸ் ஆனது தொடர்பான வழக்கில் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதன் பின் இந்த வழக்கில் ஷகிப் அல் ஹசன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 19-ஆம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும் எனவும் ஆஜாகரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே அதிகாரிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் முறையாக சரணடைந்தனர். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர், பின் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அதற்கு அனுமதியும் வழங்கியிருந்தது.
இருப்பினும், ஷகிப் அல் ஹசன் ஜனவரி 19 வரை நீதிமன்றத்தின் முன் ஆஜராகவில்லை என்பதால் தற்போது வங்கதேச நீதிமன்றம் கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வங்கி காசோலைகள் பவுன்ஸ் ஆன வழக்கில், பங்களாதேஷ் ஆல்ரவுண்டரும் முன்னாள் அவாமி லீக் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.