ஒரிஜினலா? டூப்பா? பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் எழுந்த ‘புதிய’ சர்ச்சை!

பிரபாகரன் உடனான சீமானின் புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.

seeman with prabhakaran

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து சில நாட்கள் அவருடன் பயணித்ததாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவார். இதற்கான புகைப்படங்களையும் அவர் முன்னரே வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படம் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், ” இவர் அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவர் என்கிற அடிப்படையில் ” என சீமான் பெயரையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனங்களுக்கு சங்ககிரி ராஜ்குமார் பேட்டியளித்தார். அதில், “நான் தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்த போது, அங்கு வேலை செய்யும் செங்கோட்டையன் என்பவர்  சீமான் புகைப்படமும், பிரபாகரன் அவர்கள் இருக்கும் புகைப்படமும் இருக்கும் DVD ஒன்றை கொடுத்து இதனை இணைத்து தாருங்கள். சீமானுக்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுக்க வேண்டும் என கூறினார். நானும் அதன்படி செய்து கொடுத்தேன். பிறகு அதனை கொண்டு சீமான் மேடைகளில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது போல கூற ஆரம்பித்தார். இது பற்றி நான் செங்கோட்டையினிடம் கேட்டபோது, தேவைக்கு பயன்படுத்துகிறார். தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் உருவாக்கட்டுமே என்றார் .

எனக்கும் அன்னான் சீமான் அவர்களையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களையும் பிடிக்கும் என்பதால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தற்போது சீமான் பெரியார் பற்றி சொல்வதையும், பிரபாகரன் பற்றி கூறுவதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்போது இதனை கூறுகிறேன்.” என  சங்ககிரி ராஜ்குமார் கூறி சீமான் – பிரபாகரன் புகைப்படம் குறித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ” 2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார் ! மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது?” என கட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்