மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

உத்திர பிரதேசம் பிராக்யராஜில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது

Fire accident in Prayagraj

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் நிகழ்வில் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிராயாக்ராஜிற்கு வருகை தருகின்றனர்.

இப்படியாக நாள் தோறும் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூடி வரும் நிலையில் இன்று திடீரென மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் அதிகம் கூடும் இடத்தில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக வெளியான தகவலின்படி அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்