சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…
அஜித்குமார் நடிப்பில் வரும் பிப்ரவரி 6-ல் வெளியாக உள்ள விடாமுயற்சி படத்தில் இருந்து அனிருத் இசையில் 2வது பாடலான பத்திக்கிச்சு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரிஷா, அர்ஜுன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடலான ‘சவடிக்கா’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், அப்பாடல் ரில்ஸ் வழியாகவும் அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்தது. இதனை எடுத்து இரண்டாவது பாடலான ‘பத்திக்கிச்சு’ என தொடங்கும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
அனிருத் இசையில் விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பத்திக்கிச்சி என்னும் தொடங்கும் பாடல் ராப் பாடலாக வெளியாகியுள்ளது. இந்த ராப் பகுதியை அமோக் பாலாஜி என்பவர் பாடியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படம் உலகம் முழுக்க ரிலீஸாக உள்ளது.