பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது என்றே சொல்லலாம். அதன்பிறகு வீட்டிற்குள் சில சண்டைகள் நடந்த நிலையில்,அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு கிடைத்த காரணத்தால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.
நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்த பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய ஆதரவுகளை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு பக்கம் முத்துவுக்கும், ஒரு பக்கம் பவித்ராவுக்கும், மற்றோரு பக்கம் விஷாலுக்கும் ஆதரவுகள் அதிகமாக கிடைத்ததை நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
இந்த சூழலில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்ல போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டிக்கு முத்துக்குமரன், விஜே விஷால், பவித்ரா, சௌந்தர்யா, ரயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வாகவுள்ளார். நம்மதக்க சினிமா வட்டாரங்களில் இருந்து கிடைத்து வரும் தகவலை வைத்து பார்க்கையில் முத்துக்குமரன் தான் டைட்டிலை வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். முத்துகுமரன் மற்றும் சௌந்தர்யா இருவரும் டைட்டலில் அதிகமான வாக்குடன் முன்னிலையில் உள்ளார்களாம்.
எனவே, இதில் அதிகமான வாக்குகள் பெற்று முத்துக்குமரன் தான் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவல் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் கூட நெட்டிசன்கள் மற்றும் முத்துக்குமரன் தான் போட்டியின் வெற்றியாளர் என கூறிவருகிறார்கள். வெற்றியாளர் யார் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்..