நெய் விளக்கு ஏன் ஏற்ற வேண்டும் தெரியுமா ?அதன் அற்புதமான பலன்கள் இதோ..!

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம்.

Nei vilakku (1)

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம்.

சென்னை :நாம் இறைவனை வழிபடும் முறைகளில் தீப வழிபாடும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும் ,தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், தீப வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் முப்பெரும் தேவியரும் எழுந்தருளி கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

விளக்குகளின் எண்ணிக்கையும் அதன் பலன்களும்;

  • 5 நெய் விளக்குகள் ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.
  • 9 நெய்  விளக்கு ஏற்றினால் நவ கிரக தோஷங்கள் விலகும்.
  • 12 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால்  தடைகள் நீங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும்.
  • 18 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால்  கால சர்ப்ப  தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் விலகும்.
  • 27 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு  திருமண தடை விலகும்  மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • 36 நெய் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால் சகல தோசமும் நீங்கும் .
  • 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் .
  • 108 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மன் அருள் முழுமையாக கிடைக்கும்.

நெய் விளக்கு ஏற்றிய பிறகு கோவிலின் பிரகாரத்தை மூன்று முறை வலம்  வரவேண்டும்.

நெய் விளக்கு பரிகாரம் ;

வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதும்  மாலை 6 மணி நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பாக சொல்லப்படுகிறது .அதிலும் நெய் தீபம் ஏற்றுவதால் நம் மனதில் நினைத்த  காரியங்கள் நிறைவேறும் எனவும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சர்ப்பங்கள் இணைந்து உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து செவ்வரளி சாற்றி நெய் தீபம் ஏற்றி  அர்ச்சனை செய்து வர தம்பதியினருக்கு இடையே ஒற்றுமை நிலைக்கும்.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் அம்மாவாசை தினங்களில் பெருமாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட பித்ரு தோஷம் அகலும்.

வியாழக்கிழமை  நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வர விரைவில் கரு தரிக்கும் என்பது ஐதீகம். மேலும் தீபம் ஏற்றும் போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசை, மேற்கு திசை பார்த்தவாறு ஏற்றுவது நல்ல பலனையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இறைவனின் அருளை எளிதில் பெற உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள் தான். அதுவும் திருக்கோவிலில் தீபம் ஏற்றுவது மிக சிறப்பு வாய்ந்த பரிகாரமாகும். அதிகாலை ,நண்பகல் ,அந்தி பொழுதில் ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும்.மேலும் இறைவனின் கருவறையில் இருக்கும் தூங்கா  விளக்கில் நெய் ஊற்றி வழிபட கடுமையான பிரச்சனைகள் கூட விலகும் என்பது ஐதீகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi