LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!
நாளை மறுநாள் பரந்தூர் செல்லும் விஜய் முதல் இன்று நூல்களை வெளியிடும் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். கடந்த 16ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
மேலும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கியது. 20-ஆம் தேதி பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்களை விஜய் சந்திக்கிறார். தவெக தரப்பில் 19 அல்லது 20 ஆம் தேதி விஜய் அங்கு செல்வதற்காக அனுமதி கேட்டு மாவட்ட எஸ்.பி மற்றும் தமிழக டிஜிபி இடம் கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.