“வருஷத்துக்கு 2 காமெடி படம் நடிங்க”…சந்தானத்திற்கு கோரிக்கை வைத்த விஷால்!
பல படங்களின் வெற்றிக்குப் பின்னால் சந்தானம் தூணாக இருந்தார் என நடிகர் விஷால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது.
படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது இது போன்ற காமெடியான படங்களில் நடிக்கவில்லை என்பது தான். இப்போது அவர் ஹீரோவாக நடித்து வருவதன் காரணமாகவே அவருடைய காமெடிகளை ரசிகர்கள் மிஸ் செய்வதாகவும் தெரிவித்தனர்.
ரசிகர்களை போலவே நடிகர் விஷால் காமெடியனாக நடிக்கும் சந்தானத்தை மிஸ் செய்வதாக மத கஜ ராஜா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சந்தானம் காமெடியனாக நடித்த பல திரைப்படங்கள் அவருடைய காமெடிக்காகவே வெற்றியடைந்துள்ளது. காமெடியனாக கலக்கிய பழைய சந்தனத்தை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள்.
இந்த மத கஜ ராஜா திரைப்படத்தில் நான் ஹீரோ என்றால் இரண்டாவது ஹீரோ சந்தானம் தான். என்னுடைய வேண்டுகோள் இதே மாதிரி சுந்தர் சி இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவேண்டும். ஹீரோவாக அவர் படங்களில் நடிக்கட்டும் ஆனால் அதே சமயம் வருடத்திற்கு 1 அல்லது 2 படங்களில் காமெடி கதாபாத்திரத்திலாவது நடிக்கவேண்டும்” எனவும் விஷால் மனம் திறந்து தனது ஆசையை கூறினார்.