ஆந்திராவில் எல்லையில் லாரி மீது பஸ் மோதி விபத்து… 4 தமிழர்கள் பலி.!

திருப்பதியில் இருந்து திருச்சி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Andhra Pradesh accitent

ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை சித்தூரில் நடந்துள்ளது.

இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். தற்போது, காயமடைந்தர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி, பனிமூட்டம் மற்றும் தூக்கமின்மை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்