LIVE : ஈரோடு இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல்.. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் வரை.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல் முதல் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செயப்பட்டு, ஜன.20இல் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
மேலும், நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதலை விசாரிப்பதற்காக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 10 குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 20 குழுக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.