ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக சில பல காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஏமாற்றத்துடன் படம் ரிலீஸ் ஆகும் அன்று தான் நமக்கு பொங்கல் என்று பேசிக்கொண்டு மனதை தேத்திக்கொண்டார்கள்.
இருப்பினும், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு புது ரிலீஸ் தேதி எப்போது என தெரியாமல் அந்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதனையடுத்து, திடீரென பொங்கல் விருந்து என்கிற வகையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
எனவே, ரசிகர்கள் பலரும் படத்தின் டிரைலரை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். அறிவித்தபடி டிரைலர் வெளியாகியுள்ளது. அத்துடன் படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான, டிரைலரை வைத்து பார்க்கையில் படம் கோலிவுட்டில் எடுக்கப்பட்ட படம் போல தெரியவில்லை கொஞ்சம் வித்தியாசமாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டது போல காட்சிகளில் வரும் இடங்கள் மற்றும் கலர் டோன் இருக்கிறது.
அத்துடன் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளும் பார்ப்பதற்கு திரையரங்குகளில் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. அதைப்போல அஜித் பேசும் வசனங்கள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை என அனைத்தும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. கண்டிப்பாக டிரைலரை வைத்து பார்க்கையில் படம் பெரிய அளவில் பேசப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்டிசன்கள் விமர்சனம்
டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டீசரில் குறை சொன்ன விஷயங்களை மாற்றி சில விஷயங்களை எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் கொடுத்திருக்கிறார்கள் எனவும், கண்டிப்பாக இந்த திரைப்படம் அஜித்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.