கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- உளுந்து -ஒரு கப்
- பாசிப்பருப்பு- அரை கப்
- தக்காளி- 2
- பச்சை மிளகாய்- 3
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு உளுந்து- ஒரு ஸ்பூன்
- இஞ்சி- ஒரு ஸ்பூன்[ துருவியது]
- சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்
- மிளகுத்தூள் -ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் -தேவையான அளவு.
செய்முறை;
உளுந்தை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது பருப்பை குக்கரில் சேர்த்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் மிளகு தூள் , சீரகத்தூள் ,மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது வேக வைத்துள்ள பருப்பையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
கொதித்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடவும்.இப்போது ஊற வைத்துள்ள உளுந்தை கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் துருவி வைத்துள்ள இஞ்சி ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, தேவையான அளவு உப்பு ,பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தயாராக வைத்துக் கொள்ளவும். பிறகு எண்ணெயை காய வைத்து கலந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக எண்ணெயில் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும். இப்போது இந்த போண்டாவை தேவையான அளவு சூப் ஊற்றி ஊற வைத்து எடுத்தால் போண்டா சூப் தயாராகிவிடும் .