“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

வணங்கான் படத்தில் என்னை கோட்டியாக வாழவைத்த என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

Arunvijay Bala

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘வணங்கான்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்தார், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சாய் தேவி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜிவி பிரகாஷ் குமார் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசையை கவனித்துள்ளார்.

இந்த படம் வெளியாகி 6 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘வணங்கான்’ படத்தில் கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் எக்ஸ்  பக்கத்தில், “கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான். எனக்குள் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். இதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்