ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

Suriya - Vetrimaran in Vadivasal Update

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட வெற்றிமாறன் விடுதலை படம் ஆரம்பிக்கும் முன்னரே வாடிவாசல் எடுக்கப்போவதாக கூறப்பட்டது. அதனை அடுத்து, விடுதலை எனும் சிறிய படம் 2 பாகங்கள் என பெரிய படமாக மாறிவிட்டது.

அந்த விடுதலை பாகங்கள் முடிந்த பிறகு தான் அடுத்தடுத்த பட வேலைகள் என வெற்றிமாறன் திட்டவட்டமாக இருந்துவிட்டார். சூர்யாவும் அடுத்ததடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார். இருந்தும் அவ்வப்போது வாடிவாசல் பற்றி பேசி அதனை உயிர்ப்புடன் வைத்திருந்தது வாடிவாசல் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அவரது காத்திருப்புக்கு அவ்வப்போது ரசிகர்களும் ஈடுகொடுத்து வாடிவாசல் அப்டேட்களை கொண்டாடி வந்தனர்.

ஏற்கனவே 2023 பொங்கல் தினத்தன்று வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டை வெற்றிமாறன் நடத்தினார். அதில் சூர்யா நடித்தார். அதனை அடுத்து விடுதலை 2 ரிலீஸ் ஆன பிறகு தற்போது மீண்டும் வாடிவாஸ் பக்கம் திரும்பியுள்ளர் இயக்குனர் வெற்றிமாறன். இந்த பொங்கல் தினத்தில் வாடிவாசல் பட வேலைகள் ஆரம்பிக்கும் என ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு கூறியிருந்த நிலையில், நேற்று வாடிவாசல் பட சிறிய அப்டேட் கூறியிருந்தார்.

இன்று, சூர்யா மற்றும் வெற்றிமாறன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என பதிவிட்டுள்ளார் கலைப்புலி எஸ்.தாணு.  இன்று முதல் வாடிவாசல் படத்தின் வேலைகளை வெற்றிமாறன் ஆரம்பிக்க உள்ளார் . சூர்யா, ரெட்ரோ மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு வாடிவாசல் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனின் 8வது படமாக வாடிவாசல் தயாராக உள்ளது. அவரது 9வது படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்