ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…
தமிழநாடு அரசு சார்பில் 2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளுவர் தினத்தன்று (ஜனவரி 15) வழங்கினார். திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது, கலைஞர் விருது , பாரதியார் விருது என 10 விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.
திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், மெய்யநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு விருதுகள் :
- பெரியார் விருது – விடுதலை நாகேந்திரன், ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- அம்பேத்கர் விருது – வி.சி.க எம்.பி ரவிக்குமார், ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- திருவள்ளுவர் விருது – எழுத்தாளர் மு.படிக்கராமு. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- காமராஜர் விருது – காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- மகாகவி பாரதியார் விருது – கவிஞர் கபிலன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- கலைஞர் கருணாநிதி விருது – முத்துவாவாசி. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- திரு.வி.க விருது – ஜி.ஆர்.ரவீந்திரநாத், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
- முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் விருது – வெ.மு.பொதியவெற்பன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.