அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை செய்கிறது .

sugarcane (1)

“கரும்பு தின்ன கூலியா’ என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை செய்கிறது .

சென்னை :பொதுவாக அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகளுக்கு தனி சிறப்பு உள்ளது. அந்த வகையில் கரும்பு தைப் மாதங்களில் கிடைக்கக்கூடிய   உணவுப் பொருளாகும் . பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் கரும்பும் சிறப்பு வாய்ந்தது..

கரும்பில் உள்ள சத்துக்கள்:

கரும்பில் வைட்டமின் சி ,கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ,பாஸ்பரஸ்,இரும்பு சத்து,  ரிபோபிளவின், மற்றும் பல தாது சத்துக்களை  கொண்டுள்ளது.

கரும்பின் ஆரோக்கிய நன்மைகள்:

வாய் துர்நாற்றம் ;

சிலருக்கு பேசும்போது வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கும். அவர்கள் இந்த கரும்பை கடித்து சாப்பிட்டு வர துர்நாற்றம் நீங்கும். மேலும் இதில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் பல் ஈறுகளை வலிமை படுத்தி பற்களை  உறுதிப்படுத்துகிறது.

செரிமான பிரச்சனை;

அஜீரணம், குமட்டல் ,வயிறு உப்புசம் இது போன்ற வயிறு பிரச்சனை உள்ளவர்கள் கரும்பை சாப்பிட்டு வர நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது. பொட்டாசியம் சத்து வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்தும். மேலும் செரிமான நொதிகளை சுரக்கச் செய்து நல்ல ஜீரணத்தை கொடுக்கிறது.

சிறுநீரக ஆரோக்கியம்;

கரும்பு சாறு  சிறுநீரகத் தொற்று மற்றும் கற்களை கரைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதிலுள்ள தாது சத்துக்கள் உடலில் நீர் சத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும்  சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது.

தொண்டைப்புண்;

கரும்பை கடித்து சாப்பிட்டு வர கரும்பில் உள்ள சாறும் ,உமிழ்நீரும் சேரும் பொழுது தொண்டை புண்களை ஆற்றும் தன்மையை கொடுக்கிறது. மேலும் கரும்பில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இதயம் சீராக இயங்க உதவுகிறது. கெட்ட  கொழுப்புகளை வெளியேற்றவும் செய்கிறது. கரும்பை கடித்து சாப்பிடும் போது மன அழுத்தம் குறையும் என்றும் மன உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முக்கிய குறிப்பு :

சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கரும்பு சாப்பிடுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.

மேலும் கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது. ஏனென்றால் அதில் உள்ள அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து வாயில் எரிச்சலை ஏற்படுத்தி வாய் புண்ணை உருவாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்