‘செல்போன் வேண்டாம்’ “பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது குழந்தைகள் போராட்டம்..!!
தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனி,
ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரின் செல்போன்களே முக்கியம் என குழந்தைகள் பராமரிப்பை விட செல்போனே முக்கியம் என இருந்த பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியது உலகளவில் வைரலாகப்பட்ட செய்தியாகியுள்ளது.
போராட்டத்தில் “நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக’ என்ற கோஷங்களை போட்டுக் கொண்டு 7 வயதுடைய குழந்தைகள் போராட்டம் நடத்தினர்.உங்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம் உங்களுக்கு நாங்கள் முக்கியமில்லை , உங்களுக்கு செல்போன் தான் முக்கியம் என எழுதப்படட பதாகைகளை வைத்துக் கொண்டு அந்த 7 வயது குழந்தைகள் நடத்திய போராட்டம் பெற்றோர்களை வியப்படைய செய்தது.
இந்த போராட்டத்துக்கு ஏழு வயதுடைய எமில் என்ற சிறுவன் தான் அவனுடைய தலைமையில் நடத்தி ஆச்சரியப்பட வைத்தான்.அப்போது பத்திரிகையாளர்களிடம் இந்த போராட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் செல்போனை வைத்து விட்டு எங்களை பராமறிப்பார்கள்,கவனிப்பார்கள் என நம்புகின்றோம் என்று எமில் தெரிவித்தான்.
ஹெம்பர்க் நகரில் குழந்தைகள் நடத்திய இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி என அனைவரும் விரைந்துள்ளனர்.
DINASUVADU