மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்! 

நாளை மாலை சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனை காண பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்து வருகின்றனர்.

Sabarimala Ayyappa Temple -Makara Jyothi darshan

திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி  திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை (ஜனவரி 14) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும்.

பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவதாக கூறப்படுவது ஐதீகம். இத்னை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மகரஜோதி தரிசன சமயத்தில் சபரிமலை வருவதுண்டு. இதனால் மற்ற நாட்களை விட இந்த சமயம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

இருந்தும் ஏற்கனவே ஆன்லைன் வழியாக டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். நாளை மகரஜோதி தரிசனத்திற்கு முன்பாக பந்தள அரண்மனையில் இருந்து சுவாமி ஐயப்பனுக்கு அலங்காரம் செய்ய ஆபரணங்கள் அடங்கிய ஆபரணப்பெட்டி நேற்று (ஜனவரி 12) பகல் 1 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஆபரண பெட்டி நாளை மதியம் சன்னிதானம் சென்றடையும். அதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பார்.  இதனால் நாளை சன்னிதானத்திற்கு நிலக்கல்லில் இருந்து வருவோருக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நாளை காலை 10 மணி வரை மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரஜோதியை எங்கு காணலாம்?

நாளை மாலை பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனம் காண பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  நிலக்கல் பகுதியில் அட்டதோடு, அட்டதோடு மேற்கு காலனி, இளவுகல், நீலிமலை, அய்யன் மலை, பம்பை, பெரியானை வட்டம், சன்னிதானம், சன்னிதான தரிசன பகுதி, அன்னதானம் மண்டபம், திருமுட்டத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்ரகலம், ஜோதி நகர், வனத்துறை அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதி தரிசனத்தை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்மேடு பகுதியில் இருந்து மகரஜோதி தரிசனம் காணுவோர். மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு அப்படியே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் அவர்கள் சத்திரம் வந்த பிறகு மாற்று பாதையில் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு :

நாளை மகரஜோதி தெரியும் என்பதால், பக்தர்கள் பலர் இன்று சன்னிதானத்திலேயோ அல்லது அருகாமையில் உள்ள இடங்களிலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்வர். இதனை தடுக்கும் வகையில் இன்றும் நாளையும் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னிதாந்தம் சுற்றி யாரும் சமைக்கவும் அனுமதி இல்லை என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரஜோதியை சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ள பகுதிகளில் மட்டும் காண பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்