இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school leave

சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கும், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜன. 13ஆம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது. இதன் மூலம், கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் மொத்தம் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

அதே நேரம், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக கடலூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 25ம் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்