“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அயலகத் தமிழர்களுக்கு 2 ஆண்டுகள் நேரடி கலை பயிற்சிகள் அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MKStalin

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’ மாநாட்டில், நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை வெளிநாடு வாழ் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயிற்றுவிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அயலகத் தமிழர்களுக்கு கலை பயிற்சிகள் அளிக்க 100 ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள். 2 ஆண்டுகள் நேரடி கலை பயிற்சிகள் அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

பின்னர், மேடையில் உரையாற்றிய முதலமைச்சர், “நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க, நீங்களும் தமிழ்நாட்ட மறக்கல.தமிழ்நாடும் உங்கள மறக்கல. உலகில் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்னைகள் என்றாலும் அவர்களை தேடிச் சென்று உதவியளிக்கும் வகையில், வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என்று நான் எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலக தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர். “தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. நீங்களும் தமிழ்நாட்டை மறக்கவில்லை, உங்களையும் தமிழ்நாடு மறக்கவில்லை” இதுதான் தமிழினத்தின் பாசம்.

“தமிழ் தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அமெரிக்காவில் தமிழர்களை காட்டிய பாசத்தை மறக்க முடியவில்லை”அயலக தமிழர்களால் பாலைவனம் சோலைவனமாகியுள்ளது. உலக தமிழர்களை அரவணைக்க நான் இருக்கிறேன். நான் அமெரிக்கா சென்றபோது எனக்கு அளித்த வரவேற்பை நான் மறக்கவில்லை.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் வேர்களை அடையாளம் காட்டும் திட்டம்தான் இது. இத்திட்டத்தில் தமிழ்நாடு வந்த பலர் தங்களது சொந்தங்களை கண்டுபிடித்து கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் நடந்துள்ளன.

உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி.. மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி.. தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த 2,414 தமிழர்கள் 4 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்