“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!
மதகஜராஜா’ படத்தின் பிரஸ் மீட்டில் நடிகை குஷ்பு, சுந்தர் சி இந்த படத்துக்கு எப்படி உழைத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் சுந்தர் சி-யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு, ” என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்… இந்த படத்துக்கு அவர் 12 வருஷத்துக்கு முன்னாடி எப்படி உழைத்தார் என்று எனக்கு தெரியும்.
அந்த உழைப்புக்கு இப்பொது கிடக்கின்ற வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் சந்தோசமாக இருக்கு, ஒரு படம் வந்து 12 வருஷம் முன்னாடி எடுத்த மாதிரியே இல்லை. இப்போ எடுத்த படம் மாதிரியே இருக்குது, அந்த அளவுக்கு ஆடியன்ஸ் ரெபோன்ஸ் இருக்குது.
என்டர்டெயின்மென்ட் கிங்னு சுந்தர் சியை சும்மாவா சொன்னாங்க… அவர் அதை இன்னும் கொடுத்து வருகிறார். முதலில் வீட்டுக்கு போயிட்டு என் அத்தைகிட்ட சொல்லி சுத்தி போடா சொல்லனும்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.