பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

sweet pongal (1) (1) (1)

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

  • பச்சரிசி= 250 கிராம்
  • பாசிப்பருப்பு= அரை கப்
  • பால்= அரை கப்
  • ஏலக்காய்= கால் ஸ்பூன்
  • வெல்லம்= இரண்டு கப்
  • பச்சைக் கற்பூரம்= ஒரு பின்ச்
  • நெய் =அரை கப்
  • முந்திரி =10-15
  • உலர் திராட்சை= 10- 15

jaggery (13) (1)

செய்முறை;

முதலில் பொங்கல் செய்யும் பானையை சுற்றி மஞ்சள் கட்டி அதனை சுற்றி சந்தனம் , குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். பிறகு பச்சரிசியை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும் .பாசிப்பருப்பை லேசாக வறுத்து கழுவி பச்சரிசியுடன் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பொங்கல் பானையில் பால் அரை கப் , அரிசி ஊற வைத்த தண்ணீர் ஒரு கப், தண்ணீர் ஐந்து கப் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். இந்தப் பால் நன்கு பொங்கி வரவேண்டும் .இப்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விடவும்.

milk (4) (1)

அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பிறகு வெல்லத்தை  பொடித்து  சேர்த்து கிளறி விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பு குலைந்து வேக வேண்டும். அப்பொழுதுதான் பொங்கல் சுவையாக இருக்கும் .இப்போது அதில் கால் கப் நெய் மற்றும்  ஒரு ஸ்பின்ச்  பச்சைக் கற்பூரமும் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையையும் வறுத்து பொங்கலுடன் சேர்த்து கலந்து இறக்கினால் தித்திக்கும் சுவையில் பொங்கல் தயாராகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்