அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

சமீபத்திய விபத்தை குறிப்பிட்டு துபாய் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்கவில்லை என அவரது அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Ajithkumar Racing - 24H series Car race

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க அஜித்குமார் கார் ரேஸிங் எனும் அணியை வழிநடத்தி வருகிறார்.

அஜித்குமார் கார் ரேஸிங் அணி கடந்த தகுதிச்சுற்றுகளில் கலந்து கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்று வருகிறது. இன்றுகூட ரேஸ் குறித்து பேட்டி அளித்து இருந்தார். இப்படியான சூழல் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருந்து, அஜித்குமார் ரேஸில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாக அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்த அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களில், துபாய் 24H கார் ரேஸ் தொடருக்கு தயாராகும் போது, அண்மையில் அஜித் குமாருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அஜித் குமார் ரேசிங்கின் அணி முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது. 24H ரேஸிங் பல்வேறு சவால்களை கொண்டுள்ளது. இந்த ரேஸில், அணியின் உரிமையாளராக, அவரது அணியின் ஒட்டுமொத்த வெற்றியே முதன்மையானதாக உள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்த விரிவான ஆலோசனையைத் தொடர்ந்து, அணிக்கு தேவையான சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த உரிமையாளராக அஜித் குமார் ஒரு முக்கிய கடினமான முடிவை எடுத்துள்ளார். அதில், வரவிருக்கும் துபாய் 24H தொடரில் அஜித் குமார் ரேசிங் அணியில் இருந்து அஜித்குமார் ஓட்டுவதில் இருந்து பின்வாங்கும் முடிவை அவர் முன்னெடுத்துள்ளார்.

இந்த முடிவு அவரது ரேஸிங் விருப்பத்தை விட அணியின் நலன்களை முன்னுரிமையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது. உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் இத்தகைய செயல்கள், அவரது அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நிலையான உத்வேகமாக இருக்கும்.

அஜித் குமார் துபாய் 24H தொடரில் ஓட்டுநராக அல்லாமல், மற்ற வகைகளில் தொடர்ந்து பங்கேற்பார்.  அஜித் குமார் ரேசிங்கின் உரிமையாளராக தொடர்ந்து பணியாற்றுவார். மோட்டார்ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித் குமாரின் அர்ப்பணிப்பு  சிறப்பாக விளங்குகின்றன. அவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு விளையாட்டின்  உண்மையான உறுதி தன்மையை உயர்த்துகிறது. ” என அஜித்குமார் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்