விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை வழங்கி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

election commission of india vck

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரண்டு கட்சி தலைமைக்கும் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது.  அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட நோட்டிஸில் ” 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது.

கட்சியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு,  பானை சின்னம் தமிழ்நாட்டில் அடையாளமாக விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டுது என்றால் அந்த காட்சிகள் தங்களுக்கென  தனி சின்னத்தை தேர்வு செய்து அதனை தங்கள் கட்சி சின்னமாக பெற முயற்சி மேற்கொள்ளலாம்.

எனவே, அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தங்களுக்கு பானை சின்னம் வேண்டும் என்று கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்திருக்கிறது.  இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தோ்தல் ஆணையம் ஒதுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசிகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தையும், கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்ற தகவலை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில்  அறிவித்துள்ளார். 1999இல் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு தேர்தல் களத்துக்கு வந்த விசிகவின் 25ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்