“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

ஹிந்தி தேசிய மொழி இல்லை என அஸ்வின் கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

ravichandran ashwin annamalai

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் .

அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி என கூறினார்.அப்போது யாரும் பெரிதாக சத்தம் எழுப்பவில்லை. இதனை அடுத்து பேசிய அஸ்வின், “இதை நான் சொல்லணும். இந்தி நமது தேசிய மொழி அல்ல. அதுவும் ஒரு அலுவல் மொழி அவ்வளவு தான்.” என கூறியபோது அரங்கத்தில் இருந்த பெரும்பாலானோர் கரகோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து, அஸ்வின் பேசியது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அப்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டபோது அதற்கு அவர் ” ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” என வெளிப்படையாக பதில் அளித்தார்.

இது குறித்து மதுரையில் அண்ணாமலை பேசியதாவது “என்னுடைய நண்பர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரி தான். அவர் சொன்னது போல ஹிந்தி என்பது நமது தேசிய மொழி இல்லை, அண்ணாமலையாகிய நானும் அதனைத்தான் கூறுகிறேன்.. ஹிந்தி என்பது இணைப்பு மொழி. ஹிந்தி ஒரு வசதியான, நமது கருத்துக்களை தெரிவிக்க பயன்படும் இணைப்பு மொழி” எனவும் பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்