வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது.

vaikunda ekathasi (1)

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது.

சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து  வைணவ ஆலயங்களில் வைகுண்ட  ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில்  அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.

பெருமாள் ரத்தின அங்கி  அணிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மங்கள வாத்தியம் முழங்க பக்தர்களின்  கோவிந்தா என்ற கோஷதுடன்   பெருமாள் சொர்க்க வாசலை கடந்தார். இந்த நிகழ்வை காண அமைச்சர் சேகர்பாபு உட்பட லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்களும் வழிபாடு செய்தனர்.

அதேபோல் உலக பிரிசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்அதி காலை 12: 45க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது . சிறப்பு அபிஷேக நடைபெற்று  பூலோக வைகுண்டமாகவே எம்பெருமான் காட்சியளித்தார்.அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4; 33 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்