தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

தெற்கு கலிபோர்னியாவில் 27,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் காட்டு தீ பரவி வருவதால் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

california fire accident

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், அங்கு காற்றின் வேகம் 50-60 மைல் (80-100 கிமீ) அளவுக்கு வீசி வருகிறது. எனவே, இதன் காரணமாக தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவி வருகிறது. அந்த நிலையிலும் தீயணைப்பு படைகள் அதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

வெப்பநிலை மற்றும் வானிலை காரணமாக தீயணைப்பு படைகள் தீயை கட்டுப்படுத்த பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். காற்று அதிகமாக வீசுவதால் காரணத்தால் தீயும் மற்றபகுதியில் பரவிகொண்டு இருக்க அதே சமயம் தீயும் அணைக்கமுடியாமல் வீரர்கள் போராடி வருகிறார்கள்.  குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் தீயணைப்பு படைகள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், வணிக, குடியிருப்புகள் மற்றும் முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் அழிந்து நாசமானது. அது மட்டுமின்றி, இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 முதல் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கை கொடுக்கும் வகையில், கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning