பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!
சென்னையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அங்கு போலீசார் தரக்குறைவாக பேசியதாக, அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே, பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சிபிஐ (Central Bureau of Investigation) மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரணை செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான புலனாய்வு குழு விசாரணையை கையில் எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரணை செய்தபோது இந்த விவகாரத்தில் குற்றவாளி என சதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியது.
விசாரணையில், கைதான இளைஞர் சதீஷ்க்கு உதவியதாக இருந்ததாக கூறி அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.அதைப்போல, இந்த விவகாரம் தொடர்பாக சரியாக விசாரணை நடத்தவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சதிஷ், சுதாகர் 2 வரையும் எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை, வரும் ஜனவரி 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் போக்சோ வழக்கில் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்ய அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025