நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பதவி வகித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

justin trudeau

ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ 2013 ஆம் ஆண்டு கனடா லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், லிபரல் கட்சி மிகுந்த சிக்கல்களில் சிக்கியிருந்தது. 2011 ஆம் ஆண்டு, லிபரல் கட்சி ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அதிகமாகக் குறைந்திருந்தது.

அதனை தொடர்ந்து, கடந்த  2015 ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்தார். பாலின சமநிலை, பருவநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகள், மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைவு போன்ற பல அம்சங்களை கொண்டு வந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சூழலில், அவர் பதிவு விலகுவதாக அறிவித்துள்ளது அவருடைய ஆதரவாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல் அறிவிப்பு என்பது கனடா அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாகும். அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கியுள்ளார், அதோடு இந்த முடிவு அவருடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

2025 ஜனவரி 6-ல் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உள்ள நெருக்கடிகளை ஒப்புக்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த சூழலில் அவர் விலகியுள்ள காரணத்தால் லிபரல் கட்சி மிக கடுமையான சவால்களுக்கு நேரிடும் எனும் கணிப்புகள் வெளியாகியுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து ஆதரவு அதிகரித்து, பிரதமராக பதவி பெற்று மேலான நிலையை எடுக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்