பட்டாசு ஆலை விபத்து – ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Virudhunagar Fireaccident

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தின் போது, அங்கிருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமான நிலையில், இதுவரை 6 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டின் துவக்கத்திம் முதல் வாரத்திலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பட்டாசு தொழிலாளர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து வேலைக்கு வருகை தந்தரவர்கள் யார் என்பதற்கான வருகை பதிவேடுவை சேகரிக்கும் பணியையும், விபத்து ஏற்பட்ட காரணம் பற்றியும் விசாரணையை காவல்துறை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்