“சில்க் சுமிதா நடித்த படம்” 22 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருகிறது..!!
திரைக்கு வரும் சில்க் சுமிதாவின் கடைசி படம் விரைவில் வெளியீடு
பிறகு சினிமாவில் உதவி மேக்-அப் பெண்ணாக பணிக்கு வந்த அவர், மலையாள படங்களில் நடித்து பிறகு, தமிழ் பட உலகில் துணை கதாபாத்திர நடிகையாக அறிமுகமானார்.
அவரது காந்தக் கண்கள் பல இயக்குநர்களுக்கு ஆச்சர்யம் தர, 1980-களில் வெளியான பெரும்பாலான கவர்ச்சிப் பாடல்களுக்கு நடனமாடினார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவர்ச்சிக்கான தனிபெரும் நடிகையாக ’சில்க்’ சுமிதா பெயர் பெற்றார்.
புகழின் உச்சியில் இருந்த போது, படங்கள் தயாரித்ததால் ஏற்பட்ட பண இழப்பு, உடனிருந்தவர்கள் கொடுத்த ஏமாற்றம், உறவினர்கள் விலகி சென்றது போன்ற காரணங்கலால் 1996ம் ஆண்டில் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்
இந்நிலையில், அவர் இறந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், அவர் நடித்த ‘ராக தாளங்கள்’ என்ற படத்தை வெளியிட தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சில்க் சுமிதாவின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
1995ல் சாதிப் பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை , சென்சார் அமைப்பு நிராகரித்தது. தற்போது இதை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘ராக தாளங்கள்’ பட இயக்குநர் திருப்பதி ராஜன் தெரிவித்துள்ளார்.