சிவனுக்கு காணிக்கை.? நாக்கை அறுத்துக்கொண்ட 11ஆம் வகுப்பு மாணவி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சக்தி மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவி தனது நாக்கை அறுத்துக்கொண்டு சிவன் கோயிலில் தியானம் செய்துள்ளார்.

Chhattisgarh Sakti 11th school student cut tongue

சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும் விதமாக 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், தப்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவர்கட்டா பகுதியில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர், தனது நாக்கை அறுத்துக்கொண்டார். பின்னர், அதே கோயிலில் தியானத்தில் ஈடுபட தொடங்கினார். அந்த தியானத்தில் இருந்து யாரேனும் தன்னை எழுப்பினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தியானத்தில் ஈடுபட தொடங்கினார்.

இந்த மூடநம்பிக்கை சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் 108 ஆபுலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அப்பகுதி மக்கள் மறுத்ததாக கூறபடுகிறது. பின்னர் அச்சிறுமியின் பெற்றோரை சமாதானம் செய்யவும் அதிகாரிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. நாக்கை அறுத்துக்கொண்டதால் கோயில் வளாகத்தில் பல இடங்களில் ரத்த கறை படிந்துள்ளது.

கடவுள் மீது உள்ள பக்தியால் பல்வேறு ஏற்கத்தகு நேர்த்திக்கடன்கள் நிறைய உள்ள சமயத்தில் இப்படியாக உடல் உறுப்புகளை அறுத்துக்கொள்ளும் மூட நம்பிக்கை செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்